டெல்லி: அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை 2 நாட்களில் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் உரையாற்றும்போது இந்தத் திடீர் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
ஒவ்வொரு தெருவுக்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மக்களைச் சந்திப்பேன் எனக் கூறிய கேஜ்ரிவால், தான் நேர்மையானவர் என மக்கள் தீர்ப்பு வழங்கும் வரை முதல்வர் நாற்காலியில் அமரப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரவிந்த் கேஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்தது. திகார் திறையில் அடைக்கப்பட்டிருந்த கேஜ்ரிவாலை பின்னர் சிபிஐயும் கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் ஜூலை மாதமே ஜாமீன் கிடைத்த நிலையில், சிபிஐ வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து, கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவந்தார். இதற்கிடையே தேர்தல் பிரசாரத்திற்காகவும் இடைக்கால ஜாமீனில் வெளிவந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



