'நிதியும் அதிகாரமும் என்னிடம் இல்லை' - சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, பழனிவேல் தியாகராஜன்
'நிதியும் அதிகாரமும் என்னிடம் இல்லை' - சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பேசியது என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், கூடலூர் தொகுதியில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைத்துத்தர வேண்டும் என அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயலீசன் முன்வைத்த கோரிக்கைக்கு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த கோரிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர், ''என் துறையில் உள்ள சிக்கல்களை இந்த கூட்டத்தொடரிலேயே கூறியுள்ளேன். நிதியும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை போல அல்லாமல், தொழிற்பூங்காவில் சிறு பகுதி மட்டுமே என் துறை வசம் உள்ளது. மற்றவை தொழில்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. எனவே யாரிடம் நிதியும் திறனும் அதிகாரமும் உள்ளதோ, அவரிடம் கேட்டால் செய்துக்கொடுப்பார் என நம்புகிறேன்,'' எனக் கூறினார்.

அப்போது பேசிய சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு, ''இவையெல்லாம் முதல்வரிடம் பேசி முடிவெடுக்க வேண்டியது. நேர்மறையாக பதில் சொன்னால், உறுப்பினருக்கு நன்றாக இருக்கும்,'' எனக் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு