ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்: கோப்பை யாருக்கு? ரசிகர்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு,
ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்: கோப்பை யாருக்கு? ரசிகர்கள் கூறுவது என்ன?

ஐ பி எல் 2025 இறுதி ஆட்டத்தில் எந்த அணி வெல்லப் போகிறது என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக கவனித்து வருகின்றனர். 17 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத ஆர் சி பி வெல்ல வேண்டும், விராட் கோலிக்காக வெல்ல வேண்டும் என்று ஆர் சி பி ரசிகர்கள் ஒரு புறம், மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயருக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்ல வேண்டும் என்று அந்த அணியின் ரசிகர்கள்.

"நாங்கள் சண்டையில் தோற்றுவிட்டோம், ஆனால் இன்னும் போர் முடியவில்லை" என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆர் சி பிக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில் தோல்வியுற்ற பின் கூறியிருந்தார்.

இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று இந்த காணொளியில் தெரிந்துக் கொள்ளலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு