நைஜர் நாட்டில் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் பிரத்யேக கழிவறைகள்

காணொளிக் குறிப்பு,
நைஜர் நாட்டில் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் பிரத்யேக கழிவறைகள்

முகமது பூபக்கார் மற்றும் அவரது குழு நைஜர் நாட்டின் கைடன்ரூம்ஜி ஊரில் உள்ள பின்தங்கிய சமூகங்களுக்கு பிரேத்யேக கழிவறைகளை வடிவமைத்து வழங்குகிறார்கள்.

உலகிலேயே திறந்தவெளி மலம் கழித்தல் விகிதம் (65-70%) அதிகம் உள்ள நாடுகளில் நைஜரும் ஒன்று. அங்குள்ள பின்தங்கிய சமூகங்களுக்கு மலிவு விலையில் கழிவறைகளை முகமது பூபக்காரும் அவரது குழுவினரும் விற்கின்றனர்.

இந்த சமூகங்களில் பலர் சுகாதாரமின்மையால் வயிற்றுப்போக்கு மற்றும் காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். வாட்டர் எய்ட் (Water Aid) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் வழங்கப்படும் கழிவறைகள், சுகாதாரத்தை மேம்படுத்த உதவியுள்ளன, இதுவரை 600க்கும் மேற்பட்ட கழிவறைகள் மக்களிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)