காணொளி: இலங்கை பேரிடரில் நாய்களுக்கு உணவு சமைத்து வழங்கும் நபர்கள்

காணொளிக் குறிப்பு, இலங்கை பேரிடரில் நாய்களுக்கு உணவு சமைத்து வழங்கிய மக்கள்
காணொளி: இலங்கை பேரிடரில் நாய்களுக்கு உணவு சமைத்து வழங்கும் நபர்கள்

இலங்கையில் வெள்ளம், மண்சரிவு காரணமாக உணவின்றி தவித்த நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு சிலர் உணவு சமைத்து வழங்கினர். இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் கம்மடுவ கிராமம் அமைந்துள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரில் இந்த கிராமதத்தின் பெரும்பாலான பகுதிகள் அழிந்துவிட்டன. இப்பகுதி மக்கள் இங்கே இருந்து வெளியேறிய நிலையில், இங்கே கைவிடப்பட்ட விலங்குகளுக்கு சிலர் உணவு அளிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமே அனைவரும் உணவு உதவி வழங்கி வந்த நிலையில் விலங்குகளுக்கும் உணவு அளிக்க வேண்டும் என்று தனக்கு தோன்றியதாக மாத்தளை நகரத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு