காணொளி: ராஜஸ்தானில் ஜுராசிக் கால முதலை - 20 கோடி ஆண்டுகள் பழைய புதை படிவம்
ராஜஸ்தானில் ஜுராசிக் காலகட்டத்தை சேர்ந்த அரியவகை உயிரினத்தின் புதை படிவ எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Phytosaur எனப்படும் முதலையை போன்ற அரியவகை உயிரினத்தின் புதைப்படிவம் 20 கோடி ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த Phytosaur நீர் மற்றும் நிலம் என இரண்டிலும் வாழக்கூடிய இருந்துள்ளது என புவியியல் ஆய்வாளர் சிபி ராஜேந்திரன் தெரிவிக்கிறார்.
இந்த Phytosaur அது கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மீன்களை சாப்பிட்டு உயிர்வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ராஜஸ்தான் குடிநீர் துறையை சேர்ந்த அதிகாரி Narayandas Inkhiya மற்றும் அவரது குழுவினரால் இந்த புதைப்படிவம் ஜெய்சல்மேர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் மேலும் இது போன்ற புதைப்படிவங்கள் மறைந்திருக்கலாம் என அவர் கூறுகிறார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



