காணொளி: அதீத வெப்பத்தால் கூட்டமாக நீரின் மேற்பரப்புக்கு வந்த ஜெல்லி மீன்கள்

காணொளிக் குறிப்பு, அதீத வெப்பத்தால் நீரின் மேற்பரப்புக்கு வந்த ஜெல்லி மீன்கள்
காணொளி: அதீத வெப்பத்தால் கூட்டமாக நீரின் மேற்பரப்புக்கு வந்த ஜெல்லி மீன்கள்

தென்கொரியா கடலில் அதீத வெப்பம் காரணமாக ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக நீரின் மேற்பரப்புக்கு வந்த காட்சி இது.

ஜேஜூ தீவில் ஒரு நாணயம் அளவிலே ஆன பட்டன் ஜெல்லி மீன்கள் அதிக அளவில் மிதந்தன.

"முதலில் அவற்றை பார்க்கும்போது பயமாக இல்லை. ஆனால், ஆயிரக்கணக்கான மீன்கள் மேலே மிதந்து வருவதை பார்த்தபோது நிஜமாக பயமாக இருந்தது" எனக் கூறுகிறார் லீ டாங் ஹீ.

காலநிலை மாற்றம் காரணமாக சூடான நீர் கொரியாவின் கடற்பகுதியில் கலப்பது அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஜெல்லி மீன்களால் ஆபத்து இல்லாத போதிலும் சரும ஒவ்வாமை ஏற்படலாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு