காணொளி: புதின், ஜின்பிங், கிம் மூவரும் முதன் முறையாக ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பு
காணொளி: புதின், ஜின்பிங், கிம் மூவரும் முதன் முறையாக ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பு
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததன் 80வது கொண்டாட்டம் சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்றது. சீன ராணுவத்தின் அணிவகுப்பும் நடைபெற்றது. இதில் சீனாவின் ராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். அவ்வாறு ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் முதல்முறையாக பொதுவெளியில் ஒன்றாக தோன்றினர். மூன்று நாடுகளின் தலைவர்களும் ஒன்றாக ஒரு நிகழ்வில் கலந்துகொள்வது வரலாற்றில் இதுவே முதல்முறையாக உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



