இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: தமிழர்களின் நீண்ட கால கோரிக்கை பற்றி இளைஞர்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, இலங்கை: தமிழர்களின் நீண்ட கால கோரிக்கைகள் குறித்து இளைஞர்கள் நினைப்பது என்ன?
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: தமிழர்களின் நீண்ட கால கோரிக்கை பற்றி இளைஞர்கள் கூறுவது என்ன?

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரசாரம் தீவிரமடைந்துள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள், நெடுங்காலமாக சுயநிர்ணய உரிமை, 13-வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், சமஷ்டி, தமிழ் தேசியம், அதிகார பகிர்வு போன்ற விஷயங்களை கோரி வருகின்றனர்.

தமிழ் அரசியல் தலைவர்களும் தங்களின் அரசியல் மேடைகளில் இந்த விஷயங்கள் குறித்தே அதிகம் பேசுகின்றனர்.

அரசியல் தலைவர்கள் அதிகம் பேசும் தமிழ் தேசியம், அதிகார பகிர்வு, சுய நிர்ணய உரிமை, 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் போன்றவை குறித்து இளைஞர்கள் மத்தியில் பேசப்படுகின்றனவா என்பதை பிபிசி தமிழ் அறிய முயன்றது.

இளைஞர்கள் மத்தியில் இவை பரவலாக பேசப்படாதது குறித்த காரணத்தை அறிய அரசியல் எழுத்தாளரான மேழிக்குமரனிடம் பிபிசி தமிழ் பேசியது.

இதுதொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்து என்ன என்பதை அறிய இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கத்திடம் பிபிசி தமிழ் பேசியது.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)