மரண தண்டனை கமிட்டி முதல் இரான் அதிபர் வரை: யார் இந்த இப்ராஹிம் ரைசி? - காணொளி

காணொளிக் குறிப்பு, மரண தண்டனை கமிட்டி முதல் அதிபர் வரை: யார் இந்த இப்ராஹிம் ரைசி? - காணொளி
மரண தண்டனை கமிட்டி முதல் இரான் அதிபர் வரை: யார் இந்த இப்ராஹிம் ரைசி? - காணொளி

இப்ராஹிம் ரைசி எப்பொழுதும் கருப்பு தலைப்பாகை அணிந்திருப்பார். இஸ்லாத்தில் நபி முகமதுவின் வழித்தோன்றல் அவர் என்பதைக் குறிக்கும் அடையாளமாகும் இது.

சமய அறிஞராக இருந்து வழக்கறிஞராகி, பின்னர் இரானில் அதிகாரத்தின் உச்சத்திற்கு வந்த ரைசி, அந்த நாட்டின் மதத் தலைவர்களில் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

ஷியா மதத் தலைவர்கள் படிநிலையில் அவர் ஆயத்துல்லா அலி காமனெயிக்கு அடுத்த நிலையில் இருந்தார்.

2021-ஆம் ஆண்டு, ஜூன் மாதம், இரான் அதிபராக இப்ராஹிம் ரைசி பதவியேற்ற போது உள்நாட்டு மட்டத்தில் பல சவால்களை அவர் எதிர்கொண்டார்.

ஒருபுறம் நாட்டின் சமூக நிலை கடினமாக இருந்தது. மறுபுறம் அணுசக்தி திட்டத்தால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்ட இரான் கடுமையான பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டிருந்தது.

இப்ராஹிம் ரைசி தனது தேர்தல் பிரசாரத்தின் போது, 'நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மிகவும் தகுதியான வேட்பாளர் நான் தான்’ என்று கூறியிருந்தார்.

ரைசி இந்த திசையில் சிறப்பாக எதையும் செய்வதற்கு முன்பே ஹிஜாப் தொடர்பான எதிர்ப்புகள் அவருக்கு புதிய சவால்களை உருவாக்கின.

மேலும் அறிந்துகொள்ள காணொளியைப் பாருங்கள்.

இப்ராஹிம் ரைசி

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)