அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் கூறுவது என்ன?

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி(நாளை) நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 8000 விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து பல வெளிநாட்டு பத்திரிகைகளும், செய்தித்தாள்களும் கருத்து தெரிவித்துள்ளன. ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் வட இந்தியாவில் உள்ள அயோத்தியில் தீவிரமாக நடைபெற்று வருவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

"திங்கட்கிழமை நடைபெற இருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவின் மூலம், இந்து தேசியவாதிகளின் கோரிக்கை நிறைவேறும் என்றும், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் மத்தியில் இது அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது" என அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

"இந்தியாவில் உள்ள மிகவும் சர்ச்சைக்குரிய மத ஸ்தலங்களில் ஒன்றான ராமர் கோவில் திறப்பு விழா மூலம் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன், நரேந்திர மோதியின் அரசியலுக்கு பெரிய ஊக்கம் கிடைக்கும்" என்று அந்த பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது.

“அவர் மூன்றாவது முறையாக அதிகாரத்திற்கு வர முயற்சி செய்கிறார். அதற்காக அவர்கள் இந்திய மக்கள் தொகையில் 80 சதவீதம் இருக்கும் இந்துக்களை கவர முயற்சித்து வருகின்றனர்" என்கிறது அந்த பத்திரிகை செய்தி.

‘இந்து அடிப்படைவாதிகளால் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மசூதி தகர்க்கப்பட்ட அதே அயோத்தியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்க உள்ளார்’ என செய்தி வெளியிட்டுள்ளது தி பைனான்சியல் டைம்ஸ்.

“இதை செய்வதன் மூலம் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். அதில் இந்து தேசியவாதம் முக்கியமான பங்கு வகிக்கும்” என்று அப்பத்திரிகை எழுதியுள்ளது.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் இந்த நிகழ்வு குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளன.

முழு விவரம் வீடியோவில்...

அயோத்தி ராமர் கோவில்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)