ஐ.டி.செயலிழப்பு: விமானம் துவங்கி பணப்பரிவர்த்தனை வரை டிஜிட்டல் சேவைகள் முடங்கியது எப்படி? - காணொளி
தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு (IT outage) காரணமாக உலகமெங்கும் விமான போக்குவரத்து,வங்கி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் இதனால் பாதிப்பை சந்தித்துள்ளன.
பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் விமான போக்குவரத்து தாமதமாகியும் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட்ஸ்ட்ரைக் இந்த செயலிழப்புக்கு பொறுப்பேற்றுள்ளது. மைக்ரோசாஃப்ட் வின்டோஸில் செயல்படும் கணினி உள்ளிட்ட கருவிகளில் வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்க உருவாக்கப்பட்ட ஃபால்கன் ஆண்டி-வைரஸ் ( Falcon antivirus software) மென்பொருளை புதுப்பித்த போது இந்த செயலிழப்பு நிகழ்ந்துள்ளது என்கிறது அந்த நிறுவனம்.
இந்த ஐ.டி. செயலிழப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
மேலதிகத் தகவல்களை வீடியோவில் காணலாம்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



