தங்கக்காசு - தங்கப்பத்திரம்: முதலீட்டிற்கு சிறந்தது எது? - ஒரு எளிய விளக்கம்

காணொளிக் குறிப்பு, ஆபரணமாக வாங்குவதில் உள்ள சாதகமான அம்சம், இவற்றை அணிந்து மகிழ முடியும் என்பதோடு, அவசரச் செலவுகளுக்கு இந்த நகைகளை அடகுவைத்து பணத்தைப் பெற முடியும்.
தங்கக்காசு - தங்கப்பத்திரம்: முதலீட்டிற்கு சிறந்தது எது? - ஒரு எளிய விளக்கம்

2022ஆம் ஆண்டில் தீபாவளியை ஒட்டி தங்கத்தை வாங்குவது 35 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. ஆனால், தங்கத்தை எந்த விதமாக வாங்குவது என்ற கேள்வி தொடர்ந்து நீடித்து வருகிறது. வாங்கப்படும் நோக்கத்தைப் பொறுத்து தங்கத்தைப் பல்வேறு வடிவங்களில் வாங்க முடியும்.

இந்தியாவில் வாங்கப்படும் தங்கத்தில் பெரும்பகுதி ஆபரணங்களாக அணிந்துகொள்வது என்ற நோக்கத்தில் வாங்கப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக வாங்குபவர்கள் தாங்கள் விரும்பிய கடைகளில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்.

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)