காஸாவில் இடிபாடுகளுக்கு நடுவே திருமணம் செய்து கொண்ட 54 தம்பதிகள்
இடிபாடுகளுக்கு நடுவே காஸாவில் 54 தம்பதிகள் திருமணம் செய்து கொண்டனர்.
அக்டோபர் 2023இல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் தொடங்கியதில் இருந்து பலர் கொல்லப்பட்டனர் மற்றும் இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் இந்த திருமணங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியும் துயரமும் கலந்த நிகழ்வாக இருக்கிறது.
“எனது குடும்பம் இங்கே இல்லை, அதனால் எனது மகிழ்ச்சி மிகவும் முழுமையற்றது. அவர்கள் இங்கு இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்கிறார் மணமகள் எமான் ஹசன் லாவா.
இந்த புதிய அத்தியாயம், தங்களது வாழ்வில் அமைதியை கொண்டு வரும் என்று தம்பதியினர் கருதுகின்றனர்.
“இது விவரிக்க முடியாத ஒரு உணர்வு. இவ்வளவு நடந்த பிறகு, புதிய வாழ்க்கையை தொடங்குவது அளவில்லா மகிழ்ச்சி தருகிறது. கடவுளுக்கு நன்றி, நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம். அவரது அருளால் இந்த மோதல் முடிவுக்கு வரட்டும்.” என்கிறார் மணமகன் ஹிக்மத் லாவா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



