காணொளி- சாக்பீஸில் மினியேச்சர் உருவங்களை செதுக்கும் கலைஞர்

காணொளிக் குறிப்பு, காணொளி- சாக்பீஸில் மினியேச்சர் உருவங்களை செதுக்கும் கலைஞர்
காணொளி- சாக்பீஸில் மினியேச்சர் உருவங்களை செதுக்கும் கலைஞர்

பல்ராஜ் சிங், கரும்பலகையில் எழுத உதவும் சாக்பீஸ் மூலம் கலைப்படைப்புகளை உருவாக்குகிறார். சண்டிகரைச் சேர்ந்த 39 வயதான பல்ராஜ் ஒரு மினியேச்சர் கலைஞர். பல்ராஜ், பஞ்சாபின் தேரா பாஸியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதி, பகத் சிங், மில்கா சிங், பி.ஆர்.அம்பேத்கர், அமிதாப் பச்சன் போன்றோரின் உருவங்கள் உட்பட, இதுவரை 500க்கும் மேற்பட்ட படைப்புகளை சாக்பீஸ் மூலம் பல்ராஜ் உருவாக்கியுள்ளார்.

இந்த சாக்பீஸ் கலையில் தான் தேர்ச்சி பெற்றது குறித்தும் அவர் விளக்கினார்.

“இது ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய கருவியாக இருக்கும் அதே 3 அங்குல சாக்பீஸ். நான் இதைச் செதுக்கி, சிறு உருவங்களை உருவாக்குகிறேன். இது 2011-இல் தொடங்கியது, அப்போது நான் முகங்களை மட்டுமே செதுக்கினேன். ஆகஸ்ட் 15 அன்று எனது கலைக்காக நான் கௌரவிக்கப்பட்டேன்.” என்கிறார் அவர்.

“ஒருவரின் மினியேச்சர் உருவத்தை உருவாக்க 6-7 மணிநேரம் ஆகும், ஏனெனில் ஒவ்வொரு அம்சத்தையும் உருவாக்க வேண்டும். சில நேரங்களில் அதை ஒரே அமர்வில் செய்ய முடியாது. முகம், உடல் அமைப்பு அனைத்திற்கும் நேரம் தேவைப்படுகிறது. சாக்பீஸ் கலையைப் பிரபலப்படுத்துவதே எனது நோக்கம்.” என்றும் பல்ராஜ் சிங் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு