அரசர் சார்ல்ஸுக்கு எதிராக கோஷமிட்ட ஆஸ்திரேலிய பெண் எம்.பி - ஏன்?

காணொளிக் குறிப்பு,
அரசர் சார்ல்ஸுக்கு எதிராக கோஷமிட்ட ஆஸ்திரேலிய பெண் எம்.பி - ஏன்?

பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது ஒரு பெண் உறுப்பினர் ஒருவர் இடைமறித்து அவருக்கு எதிராக கோஷமிட்டார்.

“நீங்கள் என் அரசர் அல்ல,” என்றும் அவர் கோஷமிட்டார்.

அரசர் சார்ல்ஸுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் லிடியா தோர்ப்பை பிபிசி பேட்டி கண்டது.

“அவர் இந்த நாட்டின் அரசர் அல்ல என்று இங்கிலாந்து அரசருக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்ப விரும்பினேன். அவர் என் அரசர் அல்ல.

அவர் இறையாண்மை அல்ல. நாங்கள் தனி இறையாண்மை கொண்டவர்கள்,” என்று அவர் பிபிசி-யிடம் கூறினார்.

மேலும் தகவல்கள் வீடியோவில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)