காணொளி: ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் என்ன பேசினார்? தவெக இலக்கு என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் என்ன பேசினார்? தவெக இலக்கு என்ன?

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் டிசம்பர் 18-ம் தேதியான இன்று நடைபெற்றது. கரூர் தவெக நிகழ்வில் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் முதல் முறையாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பெரிய பொதுக்கூட்டத்தில் மக்களை சந்தித்தார்.

முன்னதாக இந்த நிகழ்வில் தவெகவில் சமீபத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

பின்னர் விஜய் பேசத்தொடங்கிய சில நிமிடங்களிலேயே தவெக தொண்டர் ஒருவர் ஸ்பீக்கர் வைப்பதற்காக எழுப்பப்பட்டிருந்த தூண் மீது ஏறியதால் விஜய் தனது பேச்சை நிறுத்தி அந்த தொண்டரை கீழே இறங்குமாறு கூறினார்.

பின்னர் தனது பேச்சை தொடர்ந்த விஜய் அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து என்றும் அவர்களின் பெயரை பயன்படுத்துவதை பற்றி யாரும் புகார் சொல்ல முடியாது என்றும் பேசினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்ட முக்கியமான விஷயங்கள் என்ன? விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு