கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயத்தில் காஸா - எச்சரிக்கும் சர்வதேச அமைப்பு
காஸாவில் உள்ள ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது என்று ஐ.நா.பாலத்தீனிய அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காஸாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. இதுவரை அறிவிக்காதபோதிலும், கடுமையான பஞ்சம் ஏற்படுவதற்கான அபாயத்தில் காஸா உள்ளது என IPC (Integrated Food Security Phase Classification) எனப்படும் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு எச்சரிக்கிறது.
IPC என்பது, மக்கள் மலிவு விலை மற்றும் சத்தான உணவைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை விவரிக்கப் பயன்படும் உலகளாவிய தரநிலை.
இதன் ஐந்தாவது கட்டம் மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது. அதாவது பஞ்சமாகக் கருதப்படுகிறது. 20% குடும்பங்கள் உணவுக்கான தீவிர பற்றாக்குறையை எதிர்கொள்வது, குறைந்தது 30% குழந்தைகள், கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவது ஆகும்.
2025-ஆம் ஆண்டின் மே மற்றும் செப்டம்பருக்கு இடைப்பட்ட காலத்தில் கிட்டதட்ட 469,500 பேர் ஐந்தாம் கட்டத்தை அனுபவிப்பார்கள் என்று IPC கணித்தது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



