'யுக்ரேனுக்கு முழு ஆதரவு' உறுதியளித்த பிரிட்டன் பிரதமர்

காணொளிக் குறிப்பு, யுக்ரேன்
'யுக்ரேனுக்கு முழு ஆதரவு' உறுதியளித்த பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் சென்ற யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, பிரதமர் கியர் ஸ்டாமரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்பு வாக்குவாதத்தில் முடிவடைந்த நிலையில், பிரிட்டன் சென்றுள்ள ஸெலன்ஸ்கி அந்நாட்டுடனான நட்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

யுக்ரேனின் ராணுவ தளவாடங்களுக்காக 2.26 பில்லியன் பவுண்டுகள் கடனாக வழங்கும் ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய தலைவர்களின் உச்சிமாநாடு லண்டனில் நடைபெற்றது.

இந்த உச்சிமாநாடு தவிர, பிரிட்டன் மன்னர் கிங் சார்லஸையும், யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)