அமெரிக்காவில் பனிப்புயலுக்கு பலியாகும் மக்கள்

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட பனிப்புயலின் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் பனிப்புயலுக்கு பலியாகும் மக்கள்

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக கடுமையான பனிப்புயல் காரணமாக 90க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

பனிப்புயல் காரணமாக அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குறைந்தது 41உயிரிழந்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். வரும் நாட்களில் பனிமூட்டம் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பனிப்புயல் காரணமாக கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. வீடுகள், வாகனங்கள் போன்றவை பனிப்போர்த்தி காணப்படுகின்றன. ஒருசில இடங்களில் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாதபடி பனி குவியலாக காட்சியளிக்கிறது.

செயின்ட் லூயிஸ், சிக்காகோ(Chicago), இண்டியானாபோலிஸ், டெட்ராய்ட், பிட்ஸ்பர்க்(Pittsburgh) போன்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பனி மற்றும் உறைபனி தொடர்பான அறிவுறுத்தல்களை தேசிய வானிலை மையம் வழங்கியுள்ளது.

அவசியமின்றி பயணம் மேற்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வானிலை காரணமாக மட்டும் நாடு முழுவதும் 92 இறப்புகள் பதிவாகியிருப்பதாக சிபிஎஸ்(CBS) செய்தி ஊடகம் கூறியுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)