காணொளி: 'இந்த ஆண்டு 2 கோடி.. அடுத்த ஆண்டு 3 கோடி' - பாலில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் விவசாயி
குஜராத்தின் பனாஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதான மணிபென் சௌதரி பால் விவசாயியாக உள்ளார். முதலில் 8 பசுமாடுகளுடன் தனது தொழிலை தொடங்கிய மணிபென், இன்று சுமார் 300 மாடுகளை வைத்து பண்ணை நடத்தி வருகிறார். இவரின் குடும்பம் மிகப்பெரிய பால் வணிகத்தை நடத்தி வருகிறது, அதன் மூலம் கிராமத்தில் உள்ள பல குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றனர்.
2024-2025 இடைப்பட்ட காலத்தில், மணிபென் பால் விற்பனை மூலம் ஒன்றரை கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். அதில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம், அதாவது சுமார் ரூ.60 லட்சம் ரூபாய் தீவனம் மற்றும் இதர செலவுகளுக்காக சென்றுள்ளது. உள்ளூர் கிராம விவசாய கூட்டுறவு சங்கத்திற்கு தினமும் 1,100 லிட்டர் பால் விநியோகம் செய்கிறார் மணிபென்.
பால் கறப்பதற்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது குறைவான நேரம் மற்றும் முயற்சியில் அதிக உற்பத்தி பெற உதவுகிறது. அடுத்த ஆண்டில் மேலும் பல மாடுகளை வாங்கி தனது வணிகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என விரும்புகிறார் மணிபென்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



