காணொளி: செர்பியா நாடாளுமன்றம் வெளியே துப்பாக்கிச்சூடு; தீ வைப்பு
காணொளி: செர்பியா நாடாளுமன்றம் வெளியே துப்பாக்கிச்சூடு; தீ வைப்பு
செர்பியா நாடாளுமன்றத்தின் வெளிப்புறத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. கூடாரங்கள் எரிக்கப்பட்டன. இதில் 57 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்தார்.
சம்பவ இடத்தில் 70 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
செர்பியா அதிபர் இத்தாக்குதலை பயங்கரவாத செயல் என்றார். மேலும் தனது எதிராளியே காரணம் என குற்றம்சாட்டினார்.
அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களை தடுக்க நாடாளுமன்றத்தின் முன் அதிபரின் ஆதரவாளர்கள் கூடாரம் அமைத்திருந்தனர். அங்கு இந்த சம்பவம் நடந்தது.
ரயில் நிலையத்தின் கூரை இடிந்து 16 பேர் உயிரிழந்த சம்பவத்தால் கடந்த ஓராண்டாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்துக்கு அரசின் அலட்சியமும் ஊழலும் காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



