வளைகுடா நாடுகள் தவிர்த்து, அமெரிக்காவிடம் கச்சா எண்ணெய் வாங்கிய பாகிஸ்தான் - பின்னணி என்ன?
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் முனையத்திற்கு கடந்த புதன்கிழமை 10 லட்சம் பீப்பாய்கள் அமெரிக்க கச்சா எண்ணெய் கொண்டிருந்த கப்பல் வந்து சேர்ந்தது.
அமெரிக்க கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்குவதற்கான ஆர்டர்கள் ஏற்கனவே தங்கள் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானை சேர்ந்த சினர்ஜிகோ (Cnergyico) சுத்திகரிப்பு நிலைய நிர்வாகம் கூறுகிறது. அதே போல கடந்த சில தசாப்தங்களில் முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
நவம்பர் மத்தியிலும், அடுத்த ஆண்டு ஜனவரியிலும் அடுத்தடுத்து அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் வர உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சரி, திடீரென அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது ஏன்?
கச்சா எண்ணெய் இறக்குமதியை பன்முகப்படுத்தவும், அமெரிக்கா, பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தவும், இதை ஒரு முக்கியமான படியாக வல்லுநர்கள் பார்க்கின்றனர்.
இந்த ஆண்டு ஜூலையில், அமெரிக்கா பாகிஸ்தான் இறக்குமதிகளுக்கு 19% வரியை விதித்தது, இது மற்ற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு.
அதே போல இந்த ஆண்டு ஜூலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தானில் எண்ணெய் இருப்புகளை ஆராய்வதற்கான ஒரு ஒப்பந்தத்தையும் அறிவித்தார்.
தற்போதுவரை வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பாகிஸ்தான் தனது கச்சா எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
பாகிஸ்தான் மேற்கு ஆசியாவிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான முக்கிய காரணம் அந்த நாடுகள் பாகிஸ்தானுக்கு மிக அருகில் உள்ளதுதான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அப்படி இருக்கையில், இப்போது அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது ஏன்? அந்த கச்சா எண்ணெய் மலிவாக உள்ளதா?
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



