ராகுல் காந்தி ராஜினாமா பற்றி வயநாடு வாக்காளர்கள் சொன்னது என்ன?
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். இவற்றில், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக அவர் திங்கட்கிழமை (ஜூன் 17) அறிவித்தார்.
ரேபரேலியைத் தேர்ந்தெடுத்த பிறகு வயநாடு தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அத்தொகுதியில் பிரியாங்கா காந்தி போட்டியிடப்போவதாகச் சொல்லி கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
காந்தி குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி, வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக தனது முதல் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில், இதுகுறித்து வயநாடு தொகுதி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் அவர்களிடம் பேசியது.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



