வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா சென்றுள்ளது எதற்காக?

காணொளிக் குறிப்பு, யுக்ரேன் போர்: வடகொரியாவிடம் ரஷ்யா ஆயுதங்களை வாங்கப் போகிறதா?
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா சென்றுள்ளது எதற்காக?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் ரஷ்ய பயணத்தின்போது ராணுவ உயரதிகாரிகளும் உடன் சென்றிருப்பது, அவரது பயணம் ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் விதத்தில் உள்ளது.

ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்து மேற்குலக நாடுகள் கவலைகளை வெளிப்படுத்தும் நிலையில், என்ன மாதிரியான ஆயுதங்களை வடகொரியா ரஷ்யாவுக்கு விற்கும் என்பதும், அதனால் யுக்ரேன் மீதான போரில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதும் கேள்விக்குறியாகவே தொடர்கின்றன.

வடகொரியா தயாரிக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யாவின் வடிவமைப்பை ஒட்டி இருப்பதால், அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் ரஷ்யாவுக்கு எந்த விதமான சிரமங்களும் இருக்காது என்றே கருதப்படுகிறது.

மேலும், கிம் ஜாங் உன், தனது சொந்த நாடான வடகொரியாவின் பாதுகாப்பு குறித்தும் கவலைப்படும் நிலை உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: