காஸாவில் ரமலான் எப்படி இருந்தது?
காஸாவில் ரமலான் எப்படி இருந்தது?
காஸாவில் இடிபாடுகளுக்கு மத்தியில் ரமலான் தொழுகை நடைபெற்றது. வடக்கு காஸா முனையில் உள்ள ஜபாலியா பகுதியில் இடிந்து கிடக்கும் மசூதி கட்டடத்தின் முன்பு தொழுகை நடத்தப்பட்டது.
பெண்கள் , குழந்தைகள் உட்பட அனைவரும் தொழுகை நடத்தினர். காஸாவில் மனிதாபிமான உதவிகளில் ஈடுபட்டுவரும் தன்னார்வலர்கள் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சிப்படுத்த முயன்றனர்.
2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியது. 1,200 பேரைக் கொன்ற ஹமாஸ் குழுவினர் 251 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
பதிலடியாக இஸ்ரேல் காஸா மீது நடத்திய ராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 50,000க்கும் அதிகமான பாலத்தீனர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



