காணொளி: சளிக்கு கைவைத்தியங்கள் செய்வதால் பலன் கிடைக்குமா?
காணொளி: சளிக்கு கைவைத்தியங்கள் செய்வதால் பலன் கிடைக்குமா?
குளிர்காலம் வந்தாலே, இருமல் ஜலதோஷம் போன்ற பாதிப்புகளும் வரத் தொடங்கிவிடுகின்றன. வீட்டிலிருந்து அலுவலகம் வரை, எல்லா இடங்களிலும் இந்த சீசனில் இருமல் சத்தம் நிறைந்திருக்கும்.
இதற்கு நிவாரணமாக பெரும்பாலும் மக்கள் இருமல் மருந்துகளையே நாடுகிறார்கள். அதேபோல சிலர் தேன் மற்றும் எலுமிச்சை போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட கைவைத்தியங்களையும் முயல்கின்றனர். இரண்டில் எது அதிக பயனுள்ளவை ? இந்த வீட்டு வைத்தியம் உண்மையில் வேலை செய்யுமா?
மான்செஸ்டர் (Manchester) பல்கலைக்கழகத்தின் சுவாச மருத்துவப் பேராசிரியர் ஜாக்கி ஸ்மித், ரேடியோ 4-இன் 'ஸ்லைஸ்டு பிரெட்' (sliced bread) நிகழ்ச்சியில் இதைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



