'குரங்குகளை போல் ஓட வேண்டும் என விரும்பினேன்' - குவாட்ரோபிக்ஸ் என்றால் என்ன?

காணொளிக் குறிப்பு,
'குரங்குகளை போல் ஓட வேண்டும் என விரும்பினேன்' - குவாட்ரோபிக்ஸ் என்றால் என்ன?

'குவாட்ரோபிக்ஸை கண்டுபிடித்தவர்' என, கெனிச்சி இடோ என்ற ஜப்பானிய தடகள வீரர் பலராலும் பாராட்டப்படுகிறார். குவாட்ரோபிக்ஸ் என்பது, சில விலங்குகள் நடப்பது போல, இரு கைகள்-கால்களை உள்ளடக்கிய ஒரு வகை உடற்பயிற்சி.

"எனக்கு குரங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். மிருகக்காட்சி சாலையில் பாடஸ் குரங்குகள் ஓடுவதைப் பார்த்தேன். அவற்றின் சுறுசுறுப்பு மற்றும் வேகத்தைப் பார்த்து வியந்தேன். நானும் அவற்றைப் போல் ஓட வேண்டும் என்று விரும்பினேன்" என்கிறார் கெனிச்சி இடோ.

கெனிச்சி இடோ, நான்கு கால்களில், வேகமாக ஓடும் மனிதர்களில் ஒருவர். அவர் 100 மீட்டரை 15.71 வினாடிகளில் ஓடி முடித்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் விலங்குகளைப் போல உடையணிந்து, பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிடுகிறார்கள்.

ஆனால், சில மூத்த அரசியல்வாதிகள் குவாட்ரோபிக்ஸ் மனிதாபிமானமற்றது என்றும், பாரம்பரிய ரஷ்ய விழுமியங்களை கேலி செய்வதாகவும் கூறுகின்றனர். அதைத் தடை செய்வதற்கான ஒரு சட்டத்தைக்கூட அவர்கள் பரிசீலித்து வருகின்றனர்.

"குவாட்ரோபிக்ஸை தடை செய்வது பற்றி யோசிப்பது முற்றிலும் அபத்தமானது. பல நன்மைகள் கொண்ட விளையாட்டு அது" என்கிறார் கெனிச்சி இடோ.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)