ஹெலிகாப்டரில் தூக்கி செல்லப்படும் காண்டாமிருகங்கள் - எங்கே செல்கின்றன?
ஹெலிகாப்டரில் தூக்கி செல்லப்படும் காண்டாமிருகங்கள் - எங்கே செல்கின்றன?
அழிந்து வரும் நிலையில் உள்ள பத்து கருப்பு காண்டாமிருகங்கள் தென் ஆப்ரிக்காவிலிருந்து மொஜாம்பிக்கின் ஜினாவ் தேசிய பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
காண்டாமிருகங்களை பாதுகாக்கும் முயற்சிகளில் இந்த இடமாற்றம் மிகப் பெரிய மைல்கல் என வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹெலிகாப்டர் மூலம் வனப்பகுதியில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்ட காண்டாமிருகங்கள், கூண்டுகள் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டன. பின்னர் அவை ஜினாவ் தேசிய பூங்கா பகுதியில் விடப்பட்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



