காணொளி: பிலிப்பைன்ஸில் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த மணிக்கூண்டு

காணொளிக் குறிப்பு, காணொளி: பிலிப்பைன்ஸில் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த தேவாலய மணிக்கூண்டு
காணொளி: பிலிப்பைன்ஸில் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த மணிக்கூண்டு

பிலிப்பைன்ஸில் செவ்வாய்க்கிழமை 6.9 என்கிற அளவில் நிலநடுக்கம் பதிவானது. 32 லட்சம் மக்கள் வசிக்கும் செபு தீவின் வடக்கு முனையில் உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது செபுவில் இருந்த மக்கள் தெருக்களில் ஒன்றுகூடினர். பண்டாயன் தீவில் ஒரு சர்ச்சின் மணிக்கூண்டு சரிந்து கீழே விழுந்தது.

பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் மக்களை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். உள்ளூர் அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு