காணொளி: செங்கோட்டை பற்றிய 5 முக்கியமான விஷயங்கள்

காணொளிக் குறிப்பு, செங்கோட்டை பற்றிய 5 முக்கியமான விஷயங்கள்
காணொளி: செங்கோட்டை பற்றிய 5 முக்கியமான விஷயங்கள்

நவம்பர் 10-ஆம் தேதி டெல்லியில் காரில் நடந்த வெடிப்புச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணம், அது நடந்தது டெல்லி செங்கோட்டை அருகே.

டெல்லி செங்கோட்டை பற்றிய இந்த ஐந்து விஷயங்கள் பத்தி உங்களுக்கு தெரியுமா?

முகலாய அரசர் ஷா ஜஹான் தன்னுடைய புதிய தலைநகருக்காக ஷாஜஹானாபாத் கோட்டையை கட்டினார். இந்த கோட்டையின் கட்டுமான பணி 1639-இல் இருந்து 1648 வரைக்கும் ஒன்பது ஆண்டுகள் நடைபெற்றது.

இதற்கு செங்கொட்டை என்று பெயர் வந்ததற்கு காரணம் இந்த கோட்டை Red Sandstone மூலமாக கட்டப்பட்டுள்ளது.

இதற்கு பக்கத்துல சலீம்கார் கோட்டை இருக்கிறது. அது 1546-இல் இஸ்லாம் ஷா சூரியால் கட்டப்பட்டது. இந்த இரண்டும் சேர்ந்துதான் செங்கோட்ட வளாகம் என்று அழைக்கப்படுகிறது.

செங்கோட்டைக்கு உள்ளே நீர் விநியோகத்திற்காக ஒரு கால்வாய் கூட இருந்துள்ளது. முகலாய கட்டிடக்கலை மற்றும் கலைநயத்துக்கு செங்கோட்டை ஒரு உதாரணமாகவும் இருக்கிறது.

உலகப்புகழ் பெற்ற கோஹினூர் வைரம் பொறிக்கப்பட்டிருந்த மயில் அரியாசனம் (Peacock Throne) செங்கோட்டைக்கு உள்ளே தான் இருந்தது. 1739-இல் Peacock Throne மற்றும் Koh-i-Noor இரானின் நாதர் ஷாவால் திருடிச் செல்லப்பட்டது.

1857-ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்தின்போது, பிரிட்டிஷ்-க்கு எதிரான கலகத்தின் மையமாக செங்கோட்டை இருந்தது. ஆனால் அந்த புரட்சி வெற்றி பெறாத நிலையில் பிரிட்டிஷார் செங்கோட்டையின் பல பகுதிகளை அழித்து தங்களது வீரர்கள் தங்குவதற்கான இடங்களை கட்டிக்கொண்டனர்.

1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பிரதமர் ஜவஹர்லால் நேரு செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றினார். அப்போதிலிருந்து இன்றுவரை சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமர் தேசிய கோடி ஏற்றுகிறார். 2007-ஆம் ஆண்டு செங்கோட்டை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு