மேற்கு ஆப்பிரிக்கா: உயிருக்கு ஆபத்தான ஓபியாய்டுகளை அதிகளவில் பரப்புவதன் பின்னணியில் இந்திய மருந்து நிறுவனம் - பிபிசி புலனாய்வு
ஆபத்தான ஓபியாய்டுகள் எனப்படும் போதைப்பொருட்களை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அதிகளவில் அனுப்புவது யார்? பிபிசி ஐ ((BBC Eye) ரகசியமாக கண்டறிந்த தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்
ஒரு தசாப்தத்துக்கும் மேலாக, மேற்கு ஆப்பிரிக்கா ஓபியாய்டு நெருக்கடியின் பிடியில் உள்ளது. சட்டவிரோதமான, போதை தரக்கூடிய, ஆபத்தான மாத்திரைகள் மேற்கு ஆப்பிரிக்காவின் தெருக்களில் விற்கப்படுகின்றன. ஆனால், இந்த மாத்திரைகளை தயாரிப்பது யார்? மருந்துகளைப் போல் இருப்பதற்காக அவற்றை பேக்கிங் செய்வது யார்? கண்டெயினர்கள் மூலம் அவற்றை ஆப்பிரிக்காவுக்கு அனுப்புவது யார்?
பிபிசி ஐ, மேற்கு ஆப்பிரிக்காவில் புழங்கும் ஓபியாய்டின் வழித்தடம் இந்தியாவை நோக்கி இருப்பதை கண்டறிந்துள்ளது. மேலும், மற்றவர்களின் துயரத்திலிருந்து ஆதாயம் பெறும் சில மனிதர்களை அம்பலப்படுத்தியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



