சிவகங்கை: விழா மேடையில் பாய்ந்த ஜல்லிக்கட்டு காளை!
சிவகங்கை: விழா மேடையில் பாய்ந்த ஜல்லிக்கட்டு காளை!
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை அருகே உள்ள தாணிச்சாவூரணியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. ஒரு காளையை வீரர்கள் அடக்கிய போது அதன் வடக்கயிறு அறுந்தது.
இதையடுத்து மிரண்டு போய், தறிகெட்டு ஓடத் தொடங்கியது காளை. ஒருபுறம் நிகழ்ச்சி நிர்வாகிகள் எச்சரித்துக் கொண்டே இருக்கும்போது, மேடையை நோக்கி ஓடிய காளை, திடீரென மேடை மீது பாய்ந்தது.
இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர். பின்னர் அந்த காளை ஜல்லிக்கட்டு மைதானத்திலிருந்து வெளியேறியது. இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முழு விவரம் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



