க்ளோயி சியுங்: இவரது தலைக்கு ஒரு மில்லியன் ஹாங்காங் டாலர்கள் சன்மானம் அறிவிக்கப்பட்டது ஏன்?
"நான் பேசக்கூடாது என்பதற்காக என்னை மிரட்டுகிறார்கள். ஆனால், நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்." என்கிறார் ஹாங்காங்கைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் க்ளோயி சியுங்.
ஜனநாயகத்திற்கு ஆதரவாக செயல்பட்டதற்காக, ஹாங்காங் அதிகாரிகள் தனது தலைக்கு ஒரு மில்லியன் ஹாங்காங் டாலர்கள் சன்மானம் அறிவித்துள்ளனர் என்கிறார் அவர். இப்போது இவர் பிரிட்டனில் வசித்து வருகிறார்.
"பிரிவினையைத் தூண்டுதல், பிஆர்சி (சீனா) மற்றும் எச்கேஎஸ்ஏஆர்-க்கு (ஹாங்காங்) எதிரான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக க்ளோயிக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது" என ஹாங்காங் தேசிய பாதுகாப்பு காவல்துறை கூறுகிறது.
தனக்கு நிறைய மிரட்டல்கள் வருவதாகக் கூறும் க்ளோயி, "ஆனாலும், ஹாங்காங்கில் நீங்கள் அரசுக்கு எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதை உலகுக்கு தொடர்ந்து சொல்வேன்" என்கிறார்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



