காணொளி: மதுரோவை போல 'புதினும் சிறை பிடிக்கப்படுவாரா?' - டிரம்பின் பதில் என்ன?
மதுரோவைப் போல "புதினும் சிறைபிடிக்கப்படுவாரா?" என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் பதில்
யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவிக்கும்போது, நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடிக்கும் உங்கள் உத்தரவை மக்களைப் போல தானும் பார்த்ததாக கூறினார்.
அவர் மேலும், சர்வாதிகாரிகளுடன் விஷயங்கள் அப்படித்தான் நடக்கும் என்றால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என அமெரிக்காவுக்கு தெரியும் என்றார்.
அதாவது, புதினை சிறைபிடிக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் விரும்புவது போல தெரிகிறது.
புதினை சிறைபிடிக்க நீங்கள் உத்தரவிடுவீர்களா?
அதற்கு அவசியமில்லை.
அவருடன் எனக்கு நல்ல உறவு இருந்து வருகிறது. எனக்கு ஏமாற்றமாக உள்ளது.
8 போர்களை நான் முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். இது எளிதில் தீர்க்கக்கூடிய பிரச்னைகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.
உங்களுக்கு தெரியுமா என தெரியவில்லை, கடந்த மாதம் அவர்கள் 31,000 பேரை இழந்துள்ளனர்.
அதில் பலர் ரஷ்யப் படையினர். ரஷ்ய பொருளாதாரமும் மோசமாக உள்ளது. இறுதியில் இதற்கு தீர்வு கிடைக்கும் என நான் நினைக்கிறேன்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



