சிரியாவில் பூகம்பத்தால் வீட்டை இழந்த குடும்பம், ஓராண்டாகியும் மீள முடியாத துயரம்

காணொளிக் குறிப்பு, சிரியாவில் கடந்த ஆண்டு நடந்த நிலநடுக்கத்தால் வீட்டை இழந்துள்ளது அம் அப்தோவின் குடும்பம்.
சிரியாவில் பூகம்பத்தால் வீட்டை இழந்த குடும்பம், ஓராண்டாகியும் மீள முடியாத துயரம்

சிரியாவில் கடந்த ஆண்டு நடந்த நிலநடுக்கத்தால் 2 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

அதில் ஒரு குடும்பம் தான் அம் அப்தோவின் குடும்பம். பூகம்பத்தில் அவரது வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் ஒரு வருடம் ஆகியும் வீட்டுக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகிறது அவரது குடும்பம்.

காலை நேரங்களில் பயத்தோடு வீட்டிற்குள்ளும், இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே கூடாரம் அமைத்தும் வாழ்ந்து வருகிறது அவரது குடும்பம்.

நிலநடுக்கத்தின் போது, இவரது முதல் மருமகளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இன்னமும் நிலநடுக்கத்தின் விளைவுகளை சந்தித்து வருகிறது இந்த குடும்பம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)