ஜெர்மனி: கிறிஸ்துமஸ் சந்தைக்குள் காரைச் செலுத்தி, 5 பேரைக் கொன்ற நபர்- முன்பே எச்சரித்த செளதி

காணொளிக் குறிப்பு, ஜெர்மனி: கிறிஸ்துமஸ் சந்தைக்குள் காரைச் செலுத்தி, 5 பேரைக் கொன்ற நபரின் பின்னணி என்ன?
ஜெர்மனி: கிறிஸ்துமஸ் சந்தைக்குள் காரைச் செலுத்தி, 5 பேரைக் கொன்ற நபர்- முன்பே எச்சரித்த செளதி

கிறிஸ்துமஸ் சந்தைக்குள் கார் ஒன்று புகுந்ததில் 9 வயது சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரான 50 வயதான தலேப் அல் அப்துல்மோசன், சௌதி அரேபியாவைச் சேர்ந்தவர்.

2006இல் ஜெர்மனிக்கு சென்ற அவர் 2016இல் அகதி அந்தஸ்தைப் பெற்றார்.

பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பொதுமக்களின் கோபத்துக்கு அரசியல் தலைவர்கள் உள்ளாகியுள்ளனர்.

சௌதி அரேபியா, சந்தேகத்திற்குரிய இந்த நபரைப் பற்றி அதிகாரிகளை எச்சரித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அவர் அச்சுறுத்தல் மிகுந்த நபராக இருக்கலாம் என ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

விரிவான விசாரணை நடத்தப்படும் என ஜெர்மன் அரசு உறுதியளித்துள்ளது. முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)