பிபிசி பாராவிளையாட்டு வீராங்கனை விருது வென்ற அவ்னி லேகரா யார்?
பாரா துப்பாக்கிச் சுடுதலில் படைத்த வரலாற்று சாதனைக்காக அவ்னி லேகராவிற்கு இந்த ஆண்டுக்கான பிபிசி பாராவிளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திகேய சர்மா ஆகியோரிடம் இருந்து மெய்நிகர் வழியாக அவர் இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.
பாரா ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் இந்த அவனி லேகரா. 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராஒலிம்பிக் போட்டியில் அவர் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். 2024-ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் அவர் மீண்டும் ஒரு தங்கத்தை வென்றார்.
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் அணுகுவதற்கு ஏற்ற வகையில் பொது உள்கட்டுமானங்கள் அமைக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவருக்கு பிபிசி இந்த வருடத்தின் சிறந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை விருவிருதை பிபிசி அவருக்கு அளித்து கவுரவித்துள்ளது.
அவர் பற்றிய மேலும் பல சுவாரசியமான செய்திகள் இந்த வீடியோவில்
செய்தியாளர் - சுசிலா சிங்
கேமரா/எடிட் - தானிஷ் சித்திக்கி, சந்தீப் யாதவ்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



