ஹர்திக் பாண்டியா: பறிபோன கேப்டன் பதவி, விவாகரத்து என தொடர் சவால்களைச் சமாளிப்பாரா? - காணொளி
ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதையடுத்து, ஹர்திக் கேப்டன் பதவிக்கு வருவார் என்ற பேச்சு எழுந்தது. ஏனெனில் இதற்கு முன்பும் ஹர்திக் டி20-யில் கேப்டன் பொறுப்பைக் கையாண்டிருந்தார்.
னால், ஹர்திக்கிற்கு டி20 அணியின் கேப்டன் பதவி மட்டுமின்றி துணை கேப்டன் பதவியும் கிடைக்கவில்லை. மேலும், ஒருநாள் போட்டிக்கான அணியிலும் இடம் பெறவில்லை.
அன்று மாலை, ஹர்திக் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு கசப்பான செய்தியைப் பகிர்ந்தார். அவர் தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை விட்டுப் பிரிவதாகப் பதிவிட்டிருந்தார்.
கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. தற்போது ஹர்திக்கும், நடாஷாவும் தாங்கள் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தொடர் சவால்களை அவர் சமாளிப்பாரா?

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



