சந்திரான்-3: நிலவில் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் பயணம் - அடுத்தது என்ன?
சந்திரான்-3: நிலவில் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் பயணம் - அடுத்தது என்ன?
நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கி ஆய்வு செய்து வரும் சந்திரயான்-3 விண்கலம், அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நிலவில் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூர பயணத்தை நிறைவு செய்துள்ளதாகவும் தொடர்ந்து பயணித்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆதித்யா - எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து உரையாற்றிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்திரயான்-3 திட்டம் குறித்தும் பேசினார்.

பட மூலாதாரம், ISRO
அப்போது, “நிலாவில் ஆய்வில் ஈடுபட்டுள்ள பிரக்யான் ரோவர் லேண்டரில் இருந்து 100 மீட்டர் பயணித்துள்ளது. இரவில் தாக்குப்பிடிக்க வேண்டும் என்பதால் அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் ரோவர், லேண்டர் ஆகியவற்றுக்கு ஓய்வு கொடுக்கும் பணியை நாங்கள் தொடங்கவுள்ளோம்,” என அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



