அமேசான் நதி வரலாறு காணாத வகையில் வறண்டு போனது ஏன்?
உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல காடான அமேசான் மழைக்காடுகளில் உள்ள அமேசான் நதி வறண்டு காட்சியளிக்கிறது.
அமேசான் மழைக்காடு கார்பன் வாயுவை அதிகம் உள்வாங்கிக் கொள்கிறது. 150-200 பில்லியன் மெட்ரிக் டன் கார்பனை அது உள்வாங்கிக் கொள்கிறது. இதன் மூலம் கரியமில வாயுக்களால் பூமியின் வெப்பநிலை உயராமல் பார்த்துக் கொள்வதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது.
அமேசான் இந்தளவு வறண்டு பார்த்ததே இல்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இங்கு கடும் வெப்பத்தை உணர முடிகிறது. இப்பகுதியில் பதிவான வறட்சியிலேயே இதுதான் மிக மோசமானது.
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் பேரழிவுக்கான வெளிப்பாடுகள் குறித்து விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். நூற்றுக்கணக்கான டால்பின்கள் இறந்துள்ளன.
காட்டில் காற்று மண்டலம் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. எனவே, வறண்டு போகும்போது கட்டுப்படுத்த முடியாத அளவில் தீப்பற்றிக் கொள்கிறது.
காட்டை மீட்க முடியாத கட்டத்தை நோக்கி செல்கிறோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
வறட்சியால் ஏற்பட்ட சேதத்தை இப்போதே மதிப்பிடுவது கடினம்.
ஆனால், 2015ல் ஏற்பட்ட வறட்சியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும்.
சில வாரங்களில் மழைக் காலம் தொடங்க உள்ளது. அப்போது அமேசான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பக் கூடும். எனினும், அது முன்பைப் போல போதுமானதாக இருக்காது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



