பாராலிம்பிக்: டேபிள் டென்னிஸில் சாதிக்கத் தயாராகும் தம்பதி

காணொளிக் குறிப்பு, பாராலிம்பிக் போட்டியில் ஜொலிக்க தயாராகும் ஜோடி
பாராலிம்பிக்: டேபிள் டென்னிஸில் சாதிக்கத் தயாராகும் தம்பதி

பாராலிம்பிக் போட்டிகளில் சாம்பியனாகும் நம்பிக்கையில் உள்ளது, இந்த டேபிள் டென்னிஸ் ஜோடி.

கிறிஸ்டியானா மற்றும் கயோட் இருவரும் சிறுவயதில் போலியோ பாதிப்பு காரணமாக, மாற்றுத்திறனாளி ஆயினர்.

நைஜீரியாவில் மாற்றுத்திறனாளிகளில் ஒரு சதவிகித்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். 2 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களால் மட்டுமே கல்வியை அணுக முடிகின்றது. டேபிள் டென்னிஸ் மூலமாக கிறிஸ்டியானா மற்றும் கயோட் இருவரும் இணைந்தனர். 2017-ம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளை முன்னிட்டு நடைபெற்ற முகாமில் இருவரும் சந்தித்தனர்.

கயோட் உடன் சேர்ந்து வாழ்வதற்காக கிறிஸ்டியானா லேகாஸுக்கு இடம்பெயர்ந்தார்.

நைஜீரியாவின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதாலும் இருவருமே மாற்றுத்திறனாளிகள் என்பதாலும் அவர்கள் பல அவமதிப்புகளை சந்தித்துள்ளனர். ஆனால், மற்றவர்களை வழிநடத்துவதற்காக, தடைகளை உடைப்பதை அவர்கள் இலக்காக கொண்டுள்ளனர்.

இந்த தம்பதி முதன் முறையாக பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)