காணொளி: "கொடிய விஷம் கொண்ட பாம்பு" - இதன் பெயர் தெரியுமா?
காணொளி: "கொடிய விஷம் கொண்ட பாம்பு" - இதன் பெயர் தெரியுமா?
இது ஒரு கொடிய விஷம் கொண்ட பாம்பு. ஆங்கிலத்தில் 'பேன்டட் க்ரெய்த்' எனப்படும் இந்த பாம்பின் காணொளியை இந்திய வனப்பணி அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், "இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் இந்த பாம்பின் உடலில் கருப்பு மற்றும் மஞ்சள் நிற பட்டைகள் இருக்கும். இரவில் மட்டுமே வெளியே வரும் இந்த பாம்பு பகலில் வளைகளுக்குள் பதுங்கியிருக்கும். பொதுவாக நீர்நிலைகள் அருகே இந்த பாம்பு காணப்படும்" என பர்வீன் கஸ்வான் தெரிவித்துள்ளார்.
கொடிய விஷம் கொண்டதாக இருந்தாலும் இந்த பாம்பு மனிதர்களை பெரும்பாலும் கடிப்பதில்லை என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



