காணொளி: ஏறத்தாழ 200 பேரின் உயிரைப் பறித்த கால்மேகி புயல்
காணொளி: ஏறத்தாழ 200 பேரின் உயிரைப் பறித்த கால்மேகி புயல்
கால்மேகி புயலால் பிலிப்பின்ஸில் குறைந்தது 188 பேரும், வியட்நாமில் 5 பேரும் உயிரிழந்ததாக இரு நாடுகளின் சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
புயலின் பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்வேறு வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் பள்ளிகள் மற்றும் அரசு கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டனர். சேதங்களை சரி செய்ய ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



