காணொளி: புலிகள் உலாவும் காட்டில் காவல் காக்கும் பெண்கள்

காணொளிக் குறிப்பு, புலிகளிடமிருந்து மாணவர்களை காக்கும் பெண்கள்
காணொளி: புலிகள் உலாவும் காட்டில் காவல் காக்கும் பெண்கள்

புலிகள் இந்தப் பகுதியில் இரவு, பகலாக சுற்றித் திரியும். எப்போது தாக்கும் என்பது உறுதியாகத் தெரியாது. எல்லா திசைகளிலும் புலிகள் குறித்த அச்சம் நிலவுகிறது. இந்தச் சூழலில்தான், பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக நான்கு பெண்கள் முன்வந்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள தாடோபா வனப்பகுதிக்கு அருகே உள்ள கிராமம் சீதாராம்பேட். இந்த கிராமத்திற்கு அருகில் 10-12 புலிகள் காணப்படுவதாக வனத்துறை தகவல் அளித்துள்ளது.

கிராமத்திலிருந்து பேருந்து நிறுத்தம் 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பாலைவனம் போன்ற இந்த சாலையின் ஒருபுறம் பண்ணைகளும் மறுபுறம் காட்டுப் பகுதியும் உள்ளது. மாலை வேளையில் இருட்டிய பிறகு மாணவர்கள் பள்ளியில் இருந்து திரும்பும்போது, புலிகள் குறித்த பயம் இன்னும் அதிகரிக்கிறது.

இந்தப் பெண்கள் எடுத்திருக்கும் முன்முயற்சியைக் கருத்தில் கொண்டு, இதேபோன்ற அணுகுமுறையை 105 கிராமங்களில் செயல்படுத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு