You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜேந்திர சோழன் காதலிக்காக கட்டிய காதல் சின்னம் பற்றி தெரியுமா?
காதல் சின்னம் என்றவுடன் சட்டென உங்கள் நினைவுக்கு வருவது என்ன?
தாஜ்மஹால் தானே!
ஆனால், சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்னேரே தமிழ்நாட்டில் தனது காதலிக்காக ராஜேந்திர சோழன் கட்டிய காதல் சின்னம் ஒன்று இருப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? வரலாற்றாசிரியர்கள் சொல்லும் தகவல் இதுதான்.
சோழ வரலாற்றின் புகழை உச்சிக்குக் கொண்டு சென்ற ராஜேந்திர சோழனுக்கும், கோவிலில் ஆடல் பணிபுரியும் தேவரடியார் குலத்தை சேர்ந்த பரவை நங்கையாருக்கும் இடையே காதல் மலர்ந்தது. தனது காதலியின் வேண்டுகோளை ஏற்று வெறும் செங்கல் கோவிலை பிரமாண்ட கற்கோயிலாக மாற்றி, கோவிலின் வெளிப்புறம் தொடங்கி கலச பகுதி வரையில் பொன் வேய்ந்தார் ராஜேந்திர சோழன்.
காதலியான பரவைக்கு கிடைத்த சிறப்பு ராஜேந்திர சோழனின் பட்டத்தரசிக்கு கூட கிடைக்கவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு