You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கல்வான் தாக்குதல் - 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் பழனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
இந்திய-சீன எல்லையில் இருநாட்டு ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட தமிழக வீரர் பழனியின் உடல் இன்று அதிகாலை சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட நிலையில், காலை ஏழு மணியளவில் குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டு பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்திய-சீன எல்லையில், சீன ராணுவத்தால் கொல்லப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் உடல் நேற்று தனி ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரது சொந்த ஊரான கடுக்கலூருக்கு கொண்டு வரப்பட்டு இன்று (வியாழக்கிழமை) அதிகாலை பழனியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக, ஊர் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர் பழனியின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்திற்கு மாற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
பழனியின் இறந்த உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் உடலை இறக்கி அவரது வீட்டின் முன்பாக உறவினர்கள், பொதுமக்கள் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தொடர்ந்து, அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தமிழக முதல்வர் அறிவித்த நிதியுதவி ரூ.20 லட்ச ரூபாய்க்கான காசோலையை பழனியின் குடும்பத்தாரிடம் வழங்கினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் உள்ளிட்டோர் பழனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
300 சீன வீரர்களை கொன்ற இந்திய ராணுவம் | India China war and 1967 Clash
பிற செய்திகள்:
- "சீனா நடத்திய முன்கூட்டியே திட்டமிட்ட செயல்தான் காரணம்" - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
- "சீன ராணுவத்தினரோடு கைகலப்புக்கு அனுமதி தந்திருக்க கூடாது" - முன்னாள் தளபதி வி.பி.மாலிக்
- "கொரோனா காலத்தில் இந்தியா - சீனாவால் ஒரு போரை தாங்க முடியாது" - எஸ்.எல். நரசிம்மன்
- இந்தியா மற்றும் சீனா அமைதி காக்க வேண்டும் - நேபாள தூதரக அதிகாரிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: