இலங்கையில் 100 நாள் போராட்ட கொண்டாட்டம் - புகைப்பட தொகுப்பு

இலங்கையின் ஆளும் அரசு எதிர்ப்பு இயக்கம் ஞாயிற்றுக்கிழமை 100வது நாளை எட்டியது. பதவியில் இருந்த நாட்டின் ஜனாதிபதியை பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றிய பிறகும் அந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. இந்த நிலையில், அடுத்து ஆட்சிக்கு வரும் தலைவர் நாட்டை சரியான முறையில் வழிநடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் போராட்ட களத்தில் உள்ள மக்கள் உள்ளனர்.
கடந்த வார இறுதியில் போராட்டக்காரர்கள், தமது மாளிகையை ஆக்கிரமிப்பதற்கு சற்று முன்னதாகவே கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறினார். கடந்த வியாழக்கிழமை அவர் ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்தார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அவரது தவறான நிர்வாகமே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே இலங்கை உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில், தங்களின் போராட்டத்தின் விளைவாக கோட்டாபய நாட்டை விட்டு வெளியே சென்றதை 100ஆம் நாள் போராட்டத்தில் மக்கள் கொண்டாடினர்.
அங்குள்ள கள நிலவர படங்களை கொழும்பில் முகாமிட்டுள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் மணிகண்டன் மற்றும் இலங்கையில் இருந்து பிபிசி தமிழுக்காக செய்திகளை வழங்கும் ரஞ்சன் அருண் பிரசாத்தும் பதிவு செய்துள்ளனர். அவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.












இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








