ரக்பி வீரர் கொலை : மஹிந்த மனைவியிடம் போலீஸ் விசாரணை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ இன்று கொழும்பு குற்றப்புலனாய்வு போலீஸ் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையின் ஒரு பகுதியாக இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷிராந்தி ராஜபக்ஷவிடம் சுமார் இரண்டு மணி நேரம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவியை விசாரணைக்கு அழைத்ததற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அரசியல் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முன்னதாக இன்று திரண்டிருந்தனர்.

இதனிடையே மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித்த ராஜபக்ஷ பொலிஸ் நிதி மோசடி குற்றத் தடுப்பு பிரிவிரால் இன்று விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

செய்கோள் திட்டமொன்று தொடர்பில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு மகனான யோசித்த ராஜபக்ஷவிடமும் ரக்பி வீரர் தாஜூதீன் கொலை தொடர்பில் நாளை காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :