தமிழகத்தின் பளுதூக்கும் வீரர் சதீஷ்குமாருக்கு அர்ஜுனா விருது

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீரர்களுக்கு வழங்கப்பட்டும் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருது தமிழகத்தின் பளுதூக்கும் வீரரான சிவலிங்கம் சதீஷ்குமாருக்கு கிடைத்துள்ளது.

இந்தியாவில் கடைசியாக 2010-ம் ஆண்டில் தான் பளுதூக்கும் வீரர் ஒருவருக்கு அர்ஜுனா விருது கிடைத்திருந்தது. தமிழகத்தில் 2002-ம் ஆண்டில் பளுதூக்கும் வீரர் முத்து இந்த விருதைப் பெற்றிருந்தார்.

கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த கடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சதீஷ்குமார் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து அர்ஜுனா விருது பெற்றுள்ள ஒரே வீரரும் இவர் தான்.

இந்த விருது பற்றி சதீஷ்குமார் பிபிசி தமிழோசையிடம் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.